Sunday, May 31, 2009

ஹை டிபநிஷன் - 5 ப்ளூரே Player


மாற்றம் மட்டும் தான் மாறாதது என்பதற்கேற்ப அணைத்து துறைகளிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, வெறும் படம் மட்டும் பார்பதற்கு இல்லாமல் இணைய இணைப்பு கொண்டு online video Streaming மூலம் நகர் படங்களை காணவும், நமக்கு வேண்டிய படத்தினை மட்டும் தேர்ந்தேடுக்கும் வசதினை கொண்ட ப்ளூரே ப்ளேயர்கள் தற்போது சந்தைக்கு வந்துள்ளது.

ப்ளூரே ப்ளேயர்கள் வெறும் ப்ளூரே தட்டுகளை மட்டும் தான் இயக்குமா என் பழைய CD மற்றும் DVD களை இயக்காதா என்று கேட்கறீர்களா? கண்டிப்பாக இயக்கும்.ஹை டிபநிஷன் படங்களை மிக மிக துல்லியமாக, காட்சிகளை அகன்ற வடிவத்தில் (16:9), Dolby & DTS இல் அனுபவிக்கலாம்.மேலும் BD-Live என்ற தொழில் நுட்பம் மூலம் இனைய இணைப்பின் உதவியுடன் பார்க்கும் திரை படத்தின் ப்ரேத்யேக காட்சிகளையும், இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப கலைஞர்களின் பேட்டியும் நேரடியாக காணலாம். உதாரணத்திற்கு Batman திரைப்படத்தில் கதா நாயகனின் பேட்டியும் படம் எடுக்கப்பட்ட விதத்தினையும் காணலாம் மேலும் நேரடியாக அவர்களுடன் உரையாடலாம் (chat) .

ப்ளூரே ப்ளேயர்கள் உள்ளமைந்த DTS மற்றும் Dolby வசதியினை கொண்டுள்ளது,இதனால் ஒரு திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வை நமக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.இந்த ப்ளூரே பிளேயர்களை ப்ளூரே டிஸ்க் மூலம் மட்டும் தான் HiDef இல் படம் பார்க்கமுடியுமா ? வேறெந்த வழியும் இல்லையா ? என்று கேட்குகிறீர்களா , இருக்கிறது NetFlix,Hulu & pandora போன்ற online Streaming video மூலமும் இந்த HighDef காட்சிகளை காணலாம், இந்த வசதியுடன் வரும் ப்ளூரே ப்ளேயர்கள் சற்றே விலை அதிகம்!! இவற்றை Network Blu-ray Player என்றும் அழைப்பர்.ஒவ்வொரு நாளும் புது புது வசதிகளை அறிமுகப்படுத்துகிறது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள்.தற்போது கம்பியில்லா (wireless) தொடர்பு வசதியுடன் வருவதால், வயர்களை இணைத்து மாட்டும் தொல்லை இருக்காது இணையத்திற்கு. இந்தியாவில் இன்னும் பிரபலமடையவில்லை என்றாலும் விரைவில் ஆகிவிடும் என்று கருதுகிறேன் ஏனென்றால் இவற்றின் விற்பனை கணிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது, விலை குறையும் போது இன்னும் உயரும்.....
அதன்
பிறகு திருட்டு CD மற்றும் DVD வரிசையில் ப்ளூரே வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை........

Wednesday, May 13, 2009

ஹை டிபநிஷன் ஒரு பார்வை - 4 (ப்ளூரே disc)


சென்ற ஆண்டில் மிக பிரபலமடைந்த iphoneக்கு அடுத்த படியாக இருப்பது ப்ளூரே (Bluray) நுட்பம் தான்,சோனி(Sony),Pioneer நிறுவனத்துடன் இனைந்து ஆராய்ச்சி செய்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் இன்று உலகம் முழுவதும் தன் எல்லையை விரிவு படுத்தியுள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இதன் கொள்ளளவு 50GB ஆகும், அதிகளவு தகவல்களை சேமிக்க கண்டுபிடிக்கப்பட இந்த நுட்பம் HighDef வீடியோக்களை பார்க்க தற்போது பயன்படுகிறது.ப்ளூரேயும் சாதாரண CD யை போன்றே ஒரே அளவில் இருக்கும், இதில் நீல வண்ணம் கொண்ட கதிர்கள் (laser) மூலம் தகவல்களை பதியவும்,படிக்கவும் செய்வதால் இதற்கு ப்ளூரே ன்று பெயர்.சாதாரண DVD மற்றும் CD யில் சிவப்பு நிற கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது.

HiDef வீடியோவை காண்பதற்கு Toshiba நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நுட்பம் HD-DVD,இது DVD யை விட சற்றே அதிக கொள்ளளவு உடையது. HD-DVD க்கும் ப்ளூரேக்கும் இடையே நடைபெற்ற போரில் ப்ளூரேயே வெற்றிக்கனியை பறித்தது.

ப்ளூரேயும் DVD யை போன்றே இரட்டை லேயர் (dual layer) மற்றும் ஒற்றை லேயர் (Single layer) யை கொண்டுள்ளது.அதாவது ஒற்றை லேயர் 25Gb கொள்ளளவும் இரட்டை லேயர் 50Gb யும் உடையது.

2002 இல் ஒன்பது முன்னணி மின்னணு நிறுவனங்கள் இணைந்து ப்ளூரே கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது,இவை ப்ளூரேயின் புதிய நுட்பத்தையும் லைசென்ஸ் விவகாரத்தையும் பார்த்துக்கொள்கிறது.

2006 ஆம் ஆண்டு மத்தியில் ப்ளூரே பிளேயர் (Bluray Disc Player) விற்பனைக்கு வந்தன பின்னர் HD-DVDயை ஓரங்கட்டியது.

ஹாலிவுட் திரைபடத் தயாரிப்பு நிறுவனங்களில் முதல்முதலாக "20thCentuary Fox" ப்ளூரே கூட்டமைப்பில் இணைந்தது அதன் பின்னர் மற்ற தயாரிப்பு நிறுவனங்கலும் இணைந்து தமது படங்களை ப்ளூரேயில் வெளியிட ஆரம்பித்தன.

சென்ற ஆண்டில் வெளிவந்து பின்னர் ப்ளூரேயில் வெளியிடப்பட்ட "The Dark Knight" திரைப்படம் 30 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகளை விற்று சாதனை படைத்தது. இதன் வெற்றியை அடுத்து மற்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களும் தமது பழைய வெற்றிப்படங்களை ப்ளூரேயில் வெளியிட ஆரம்பித்தன. ப்ளூரேயில் மற்றொரு சிறப்பம்சம் HighDef இல் காட்சிகள் மற்றும் 5.1 அல்லது 7.1 DOLBY surround இல் திரைபடத்தை நாம் ப்ளூரேயில் காணலாம்.இந்தியாவில் ப்ளூரேயில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படம் நமது சூப்பர் ஸ்டாரின் "சிவாஜி" ......





.
.
.
.
.
.
.


ப்ளூரே பிளேயர் அடுத்த பதிவில் .........

Monday, May 11, 2009

ஹை டிபநிஷன் - 3 - High Definition (LCD)


அடுத்து நாம் பார்க்க இருப்பது LCD டிவியில் HighDef இன் பங்கு.

இதில் மிக மிக பிரமாண்டமான வளர்ச்சி கண்டுள்ளது இந்த HD நுட்பம்,HD இன் வரவினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது CRT தொழில் நுட்பத்தை கொண்ட இன்றைய சாதரண தொலைக்காட்சிகள் , ஒவ்வொரு மாதமும் LCD மற்றும் Plasma TVக்களின் விற்பனை சதவீதம் எகிறிக் கொண்டிருக்கிறது. Plasmaவை விட LCD TV விலை குறைவு என்பதால் மக்களும் இதையே விரும்புகின்றனர், அதனால் சந்தைக்கு LCD TV புதுப்புது வசதிகளுடன் வருகிறது, அது என்னங்க LCD Plasma என்று கேட்குகிறிர்களா?

LCD என்பது Liquid Crystal Display (படிகச்சீர் நீர்மத் திரை) என்பதன் சுருக்கம், இது குறைந்தளவே மின்சாரம் எடுக்கும் என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும். Plasma என்பது PDP என்னும் plasma display panel ஆகும், இதுவும் HD காட்சிகளை வழங்கும் ஒரு தட்டைவடிவான தொலைக்காட்சி நுட்பம்.

சந்தை மதிப்பில் Plasma வை விட LCD தான் அதிகளவு விற்பனையாகிறது. ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனங்களும் தமது LCD திரை தொலைக்காட்சிக்கு ப்ரேத்யேக பெயரை வைத்து சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. உதாரணத்திற்கு Sony BRAVIA என்றும் LG Scarlett என்றும் Panasonic VIERA என்றும் Toshiba REGZA என்றும் ஒவ்வொரு தயாரிப்பும் புதுப்புது பெயரில் வெளியிடுகிறது.

வெறும் LCD TV மட்டும் இருந்தால் நாம் HighDef காட்சிகளை காண முடியுமா? கண்டிப்பாக முடியாது,HD இல் காண்பதற்கு உள்ளீடும் (input) HD யை கொண்டிருக்க வேண்டும், உதாரணத்திற்கு HD settop box மூலம் HD சேனல்களை LCD TV மூலம் பார்க்கலாம்,Blueray பிளேயர் மூலம் HD திரைப்படங்களை காணலாம்.HD வசதி கொண்ட வீடியோ கேமராவை இணைத்தும் பார்க்கலாம்.LCD டிவியில் நாம் கவனிக்க வேண்டியது அதன் Contrast ratio மற்றும் response time. LCD டிவியில் Contrast ratio அதிகம் இருக்க வேண்டும் response time மிக குறைவாக இருக்க வேண்டும்.

தற்போது LCD டிவியில் கம்பியற்ற இணைப்பு(wireless) வசதிகளுடன் வருகிறது இதன் மூலம் இணைய இணைப்பு கொண்டு NetFlix,YouTube,Hulu மற்றும் Amazon video போன்ற இணையதளங்களில் உள்ள வீடியோ படங்களை LCD திரையிலே காணலாம்.





அடுத்த பதிவில்.......

Sunday, May 10, 2009

ஹை டிபநிஷன் - 2 - High Definition (DTH & cable)


சென்ற பதிவில் இந்த Hidef ஆனது கேபிள் மற்றும் DTH துறைகளில் செய்து கொண்டிருக்கும் மாற்றங்களை பார்த்தோம், மேற்குலகிலும் இந்த HiDef ஒரு சிறப்பு சேவையாகவே கூடுதல் கட்டணத்துடன் வழங்குகின்றனர், இதன் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கிறது ,ஒவ்வொரு சேனல்களும் தனது HD சேவையை ஆரம்ப்திதுள்ளது.

ஆனால் DTH இல் இந்த HD சேவையை வழங்க DTH நிறுவனங்கள் அதிகளவு அலைவரிசை (bandwidth) ஒதுக்க வேண்டிஉள்ளது , DTH இல் இந்நிறுவனங்கள் வழங்கி வரும் சாதரண அலைவரிசை (channel) SD என்ற Single Definition ஆகும்.
HD இல் ஒளிப்படம் அல்லது நகர் படத்தின் தெளிவான காட்சிகள் மட்டுமில்லாமல் ஒலியிலும் (Audio) பெரும் மாற்றமடைந்துள்ளது, ஆதாவது DOLBY மற்றும் 5.1 surround லிம் நாம் கேட்கலாம். இந்த HD இன் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் காட்சிகள் 16:9 (16*9 அளவில் ) அகன்ற காட்சிகளை காணலாம்.இதனை காண LCD,LED மற்றும் plasma TV இல் கண்டு களிக்கலாம்.இதனை பற்றி இனி வரும் பதிப்புகளில் காணலாம்.

சேனல்களுக்கு இந்த HD கட்டமைப்பை அமைக்க கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும், இதெற்கென பிரத்தேக கேமரா மூலம் படம் பிடிக்க வேண்டும். சேனல்களின் வருமானத்தை பார்த்தால் இந்த செலவு ஒரு பொருட்டல்ல என நினைக்கிறேன்.

ஒரு திரையரங்கில் நாம் படம் பார்க்கும் அனுபவத்தை இந்த HD மூலம் அமைக்கப்பட்ட வீட்டு திரைஅரங்கில் அனுபவிக்கலாம், அதாவது HD settop box, பெரிய LCD TV மற்றும் 5.1 surround உள்ள ஒலிப்பெருக்கி மூலம் அனுபவிக்கலாம்.

Tuesday, May 5, 2009

ஹை டிபநிஷன் - 1 High Definition









ஒளிப்படம் மற்றும் நகர் படத்தின் அடுத்த பரிணாமம் தான் HighDefinition, இதில் காட்சிகளை மிக துல்லியமாக காணலாம் ஹை டேபினிஷனின் ஒளி அளவுகள் (video modes) 1080p மற்றும் 720p என்றழைப்பர்,அதாவது 1,080 வரிகள் குறுக்கு மற்றும் கிடைமட்டத்தின் resolution யையும் p என்பது progressive scan னையும் குறிக்கும், அதாவது நகர் படத்தின் பிம்பங்கள் தொடர்ச்சியாக இருக்கும் இடைவேளை இல்லாமல்.

இதில் 1080p FullHD என்றும் 720p HDReady எனப்படும், இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால் FullHD இல் பிம்பத்தின் அளவு 1920*1080 என்ற அளவிலும் அல்லது 2,073,600 pixel களாக இருக்கும், இதுவே முழுமையான ஹை டேபினிஷன் ஆகும்.


இனி இந்த ஹை டேபினிஷன் எந்தெந்த ஊடகத்தில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது என்று நாம் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.முதலில் DTH மற்றும் கேபிள் தொழில் Hidef இன் பங்கை பார்ப்போம்.

கேபிள் தொழிலில் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது இந்த HighDefinition, மேற்குலகில் முன்பே பிரபலமடைந்தாலும் தற்போது தான் ஆசியாவில் நுழைந்துள்ளது.இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து முன்னணி தொலைக்காட்சிகளும் தங்களது HD சேவையை தொடங்கியுள்ளது. உதாரணமாக DiscoveryHD,NatGeo HD,HBO HD,MTV போன்றவை தொடங்கியுள்ளது, மேலும் பல தொலைக்காட்சிகள் தங்களது சேவையை ஆரம்பிக்கவுள்ளது .





இந்தியாவில் DTH யில் இச்சேவையை SUN TV முதன்முதலாக தொடங்கியுள்ளது ,இதற்கு SUN HD என்று பெயர் ,தற்போது தமிழ்,தெலுங்கு மற்றும் ஆங்கில திரைப்படங்களை HD மூலம் வழங்குகிறது,விரைவில் SUN TV மற்றும் Gemini TV தன் HD சேவையை தொடங்கவுள்ளது .ஆனால் விலை தான் ரொம்ப அதிகம், விரைவில் சந்தையின் வரவேற்பை பொறுத்து குறையும் என எதிர்பார்க்கலாம்.

நண்பர்களே , HighDefinition க்கு சரியான தமிழ் சொல் இருந்தால் தெரியப்படுத்தவும் .

தொடரும் . . . .