Wednesday, June 24, 2009

ஹை டிபநிஷன் ஒரு பார்வை - 7 (3D TV)


இந்த தொலைக்காட்சி யுகத்தில் பரிணாம வளர்ச்சி அபரிதமானது, இதுவரை highdef காட்சிகளை வழங்கும் தொலைக்காட்சிகள், ப்ளூரே ப்ளேயர்கள் மற்றும் settop box இவற்றை கண்டோம், அடுத்ததாக வந்துள்ள நுட்பம் காட்சிகளை காணும் போது நம்மை பரவசமூட்டும் அனுபவத்தை அளிக்கும் புதிய 3D என்னும் முப்பரிமான பிம்பம் நுட்பம்.

இதுவரை திரைப்படங்களிலேயே நாம் கண்ட இந்த 3D என்னும் முப்பரிமான நுட்பம் தற்போது தொலைக்காட்சிகளிலும் புகுந்துள்ளது, இதற்கும் திரைப்படங்களை போலவே விசேஷ கண்ணாடி அணிந்து காண வேண்டும்.

என்ன செய்தால் மக்களை கவரலாம் என்பதின் வெளிப்பாடே இந்த புதிய நுட்பம், இது இன்னும் முழுமையான பயன் பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்களாகும்.LCD டிவிக்கு பின்னர் வந்த LED டிவி பிரபலமடைவதற்கு முன்பே இந்த முப்பரிமான பிம்பத்தை அளிக்கும் நுட்பம் வந்துள்ளது.சில முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் 3D டிவிக்களை சந்தையில் அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது .ஆனால் இன்னும் அதற்கு தேவையான 3D காட்சிகள்,நிகழ்ச்சிகள் அதிகம் எடுக்கப்படவில்லை. விரைவில் ப்ளூரேயில் 3D திரைப்படங்களை வெளியிடப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

சமீபத்தில் தான் LG மற்றும் Philips நிறுவனம் தனது முப்பரிமான தொலைக்காட்சி பெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது .இதனைப்பற்றி முழுமையாக பின்னர் பார்ப்போம்.

Thursday, June 4, 2009

ஹை டிபநிஷன் - 6 - HDMI


இது வரை highDef இல் காட்சிகளை காண்பதை பற்றி பார்த்தோம், இனி இந்த HighDef சாதனங்களை எவ்வாறு இணைப்பதை பற்றி பார்க்கலாம். LCD டிவி ,ப்ளூரே பிளேயர்,HD Settop Box யை இனைபதற்கு HD சிக்னலை எடுத்து செல்வதற்கு பயன்படும் ஒரு கடத்தியே HDMI(High Defenition MultiMedia Interface) ஆகும். இது ஒரு ஆடியோ மற்றும் வீடியோ டிஜிட்டல் சிக்னலை கடத்தும் ஒரு கடத்தி,இதன் மூலம் கணினி வீடியோ சிக்னலையும் இணைத்து திரையில் காணலாம்.இதனால் 480i லிருந்து 1600p க்கும் அதிகமான resolution கொண்ட காட்சிகளை பார்க்க முடியும் இந்த HDMI கேபிள் மூலம்.
மற்ற கேபிளை விட இதில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா ? சாதரண வயர்கள் மூலம் எடுத்த செல்ல முடியாத அதிக resolution கொண்ட வீடியோ சிக்னல்களை இந்த HDMI கேபிள் எடுத்து செல்கிறது. இதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் HDMI வயர்கள் மூலம் இணைக்கப்பட்ட சாதனங்களான LCD டிவி,ப்ளூரே பிளேயர் மற்றும் HD Settop box யை ஒரே ஒரு ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம்,மூன்று ரிமோட் தேவையில்லை ஒன்றே போதுமானது, இதற்கு CEC(Consumer Electronics Control) என்ற நுட்பம் உதவுகிறது. இந்த வகை நுட்பத்தினை ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் தனித்தனி பெயர்களை வைத்துள்ளது, அவை SamSung (ANYNET),Sony (BRAVIA Theatre Sync), LG (SIMPLINK), Sharp (AQUOS Link), Panasonic(VIERA Link) ஆகும். இந்த மூன்று HighDef உபகரணங்களான LCD டிவி,ப்ளூரே பிளேயர் மற்றும் HD Setttop Box ஆகியவை ஒரே தயாரிப்பாக இருக்க வேண்டும் அப்போதுதான் முழுமையாக இயங்கும்.

மென்பொருளை போன்றே இந்த HDMI க்கும் பல்வேறு பதிப்புகள் இருக்கிறது, உதாரணத்திற்கு HDMI 1.0, HDMI 1.2, HDMI 1.3, தற்போது சந்தையில் இருப்பது HDMI 1.3 பதிப்பாகும் , ஒவ்வொரு HDMI பதிப்பிலும் மேம்படுத்தப்பட்ட செயல் திறன் அறிமுகப்படுத்தபட்டது,உதாரணத்திற்கு HDMI 1.2 வரை DTS,Dolby ஆடியோ சிக்னல்களை இயக்கவில்லை, HDMI 1.3 இல் தான் support செய்யதொடங்கியது.

தற்போது சந்தையில் வெளிவரும் அணைத்து HighDef சாதனங்களும் கண்டிப்பாக HDMI இணைப்பு கொண்டதாகத்தான் இருக்கும், இந்த சாதனங்களில் எவ்வளவுக்கதிகம் HDMI port இருக்கிறதோ அவ்வளவுக்கதிகம் HDMI இணைப்பு கொண்ட மற்ற சாதனங்களை இணைக்கலாம். தற்போது வெளிவரும் மடிக்கணினிகளில் கூட இந்த HDMI port உடன் வருகிறது, இதனால் LCD திரையுடன் இணைத்து HighDef காட்சிகளை பார்க்கலாம்.

அடுத்த மாதம் HDMI 1.4 பதிப்பு வெளி வரவுள்ளது , இதில் இணைய இணைப்புடன் 100Mbps வேகத்துடன் தகவல்களை எடுத்துசெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.