
பிரபல முன்னணி மின்னணு நிறுவனமான சோனி, 3D தொலைக்காட்சி தயாரிப்பில் இறங்குகிறது. மேலும் அறிய இங்கு க்ளிக் செய்யவும் .........










இந்த வசதியுடன் வரும் ப்ளூரே ப்ளேயர்கள் சற்றே விலை அதிகம்!! இவற்றை Network Blu-ray Player என்றும் அழைப்பர்.ஒவ்வொரு நாளும் புது புது வசதிகளை அறிமுகப்படுத்துகிறது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள்.தற்போது கம்பியில்லா (wireless) தொடர்பு வசதியுடன் வருவதால், வயர்களை இணைத்து மாட்டும் தொல்லை இருக்காது இணையத்திற்கு. இந்தியாவில் இன்னும் பிரபலமடையவில்லை என்றாலும் விரைவில் ஆகிவிடும் என்று கருதுகிறேன் ஏனென்றால் இவற்றின் விற்பனை கணிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது, விலை குறையும் போது இன்னும் உயரும்.....
HiDef வீடியோவை காண்பதற்கு Toshiba நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நுட்பம் HD-DVD,இது DVD யை விட சற்றே அதிக கொள்ளளவு உடையது. HD-DVD க்கும் ப்ளூரேக்கும் இடையே நடைபெற்ற போரில் ப்ளூரேயே வெற்றிக்கனியை பறித்தது.
ப்ளூரேயும் DVD யை போன்றே இரட்டை லேயர் (dual layer) மற்றும் ஒற்றை லேயர் (Single layer) யை கொண்டுள்ளது.அதாவது ஒற்றை லேயர் 25Gb கொள்ளளவும் இரட்டை லேயர் 50Gb யும் உடையது.
2002 இல் ஒன்பது முன்னணி மின்னணு நிறுவனங்கள் இணைந்து ப்ளூரே கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது,இவை ப்ளூரேயின் புதிய நுட்பத்தையும் லைசென்ஸ் விவகாரத்தையும் பார்த்துக்கொள்கிறது.
2006 ஆம் ஆண்டு மத்தியில் ப்ளூரே பிளேயர் (Bluray Disc Player) விற்பனைக்கு வந்தன பின்னர் HD-DVDயை ஓரங்கட்டியது.
ஹாலிவுட் திரைபடத் தயாரிப்பு நிறுவனங்களில் முதல்முதலாக "20thCentuary Fox" ப்ளூரே கூட்டமைப்பில் இணைந்தது அதன் பின்னர் மற்ற தயாரிப்பு நிறுவனங்கலும் இணைந்து தமது படங்களை ப்ளூரேயில் வெளியிட ஆரம்பித்தன.
இந்தியாவில் ப்ளூரேயில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படம் நமது சூப்பர் ஸ்டாரின் "சிவாஜி" ......

LCD என்பது Liquid Crystal Display (படிகச்சீர் நீர்மத் திரை) என்பதன் சுருக்கம், இது குறைந்தளவே மின்சாரம் எடுக்கும் என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும். Plasma என்பது PDP என்னும் plasma display panel ஆகும், இதுவும் HD காட்சிகளை வழங்கும் ஒரு தட்டைவடிவான தொலைக்காட்சி நுட்பம்.
சந்தை மதிப்பில் Plasma வை விட LCD தான் அதிகளவு விற்பனையாகிறது. ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனங்களும் தமது LCD திரை தொலைக்காட்சிக்கு ப்ரேத்யேக பெயரை வைத்து சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. உதாரணத்திற்கு Sony BRAVIA என்றும் LG Scarlett என்றும் Panasonic VIERA என்றும் Toshiba REGZA என்றும் ஒவ்வொரு தயாரிப்பும் புதுப்புது பெயரில் வெளியிடுகிறது.
வெறும் LCD TV மட்டும் இருந்தால் நாம் HighDef காட்சிகளை காண முடியுமா? கண்டிப்பாக முடியாது,HD இல் காண்பதற்கு உள்ளீடும் (input) HD யை கொண்டிருக்க வேண்டும், உதாரணத்திற்கு HD settop box மூலம் HD சேனல்களை LCD TV மூலம் பார்க்கலாம்,Blueray பிளேயர் மூலம் HD திரைப்படங்களை காணலாம்.HD வசதி கொண்ட வீடியோ கேமராவை
இணைத்தும் பார்க்கலாம்.LCD டிவியில் நாம் கவனிக்க வேண்டியது அதன் Contrast ratio மற்றும் response time. LCD டிவியில் Contrast ratio அதிகம் இருக்க வேண்டும் response time மிக குறைவாக இருக்க வேண்டும்.
தற்போது LCD டிவியில் கம்பியற்ற இணைப்பு(wireless) வசதிகளுடன் வருகிறது இதன் மூலம் இணைய இணைப்பு கொண்டு NetFlix,YouTube,Hulu மற்றும் Amazon video போன்ற இணையதளங்களில் உள்ள வீடியோ படங்களை LCD திரையிலே காணலாம்.
அடுத்த பதிவில்.......




