Sunday, July 12, 2009

வீட்டுக்குளே ஒரு வானவேடிக்கை - Virtual Fireworks


அறிவியலில் மாற்றங்கள் தான் எத்தனை அருமையானவை , குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பார்க்கும் பொது மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு காட்சி அது விண்ணிலே பட்டாசுகளின் வானவேடிக்கை, தீபாவளிக்கும் நம்ம ஊர் திருவிழாவிலும் கண்டிப்பாக இடம் பெரும். சிறிது நேரமே என்றாலும் அந்த மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை. அப்படி பட்ட அந்த வான வேடிக்கைக்கு பெரியர்வர்கள் காசை கரியாக்கிகிறோம் என்றும் திட்டுவர்.

அறிவியல் நுட்பம் இதனையும் விடவில்லை, ஆம் விண்ணிலே நிகழும் அந்த வானவேடிக்கை இப்போது நம் வீட்டுக்குள்ளேயும் பார்க்கலாம் என்பது தான் அந்த ஆச்சர்யமான விஷயம்.

இந்த வீட்டுக்குள்ளே நிகழும் வான வேடிக்கை பாதுகாப்பானதும் கூட , ஏனென்றால் இது பட்டாசுகளினால் அல்ல ஒரு செயற்கை காட்சி அதுவும் வீட்டுக்குளே இருட்டறையில். projector மூலம் திரையிடப்பட்டு சுவற்றில் விட்டத்தில் காணலாம் , வெறும் காட்சிகள் மட்டுமில்லாமல் ஒலியும் நம்மை பரவசபடுத்துகிறது, இத்தனை ஜப்பானை சேர்ந்த SegaToys என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் ஐந்து projector லென்ஸ், projector plates மற்றும் அதற்கு தேவையான realistic sound உள்ளது.இந்த projector கருவிக்கு Uchiage Hanabi என்று பெயர்.

இனி மழை காலத்திலும் குழந்தைகள் அழுதால் இதனை இயக்கி அவர்களை மகிழ்ச்சி படுத்தி நாமும் ரசிக்கலாம் ....









http://www.youtube.com/watch?v=3yc4R4xBoAs&feature=player_embedded

No comments:

Post a Comment