Sunday, May 10, 2009

ஹை டிபநிஷன் - 2 - High Definition (DTH & cable)


சென்ற பதிவில் இந்த Hidef ஆனது கேபிள் மற்றும் DTH துறைகளில் செய்து கொண்டிருக்கும் மாற்றங்களை பார்த்தோம், மேற்குலகிலும் இந்த HiDef ஒரு சிறப்பு சேவையாகவே கூடுதல் கட்டணத்துடன் வழங்குகின்றனர், இதன் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கிறது ,ஒவ்வொரு சேனல்களும் தனது HD சேவையை ஆரம்ப்திதுள்ளது.

ஆனால் DTH இல் இந்த HD சேவையை வழங்க DTH நிறுவனங்கள் அதிகளவு அலைவரிசை (bandwidth) ஒதுக்க வேண்டிஉள்ளது , DTH இல் இந்நிறுவனங்கள் வழங்கி வரும் சாதரண அலைவரிசை (channel) SD என்ற Single Definition ஆகும்.
HD இல் ஒளிப்படம் அல்லது நகர் படத்தின் தெளிவான காட்சிகள் மட்டுமில்லாமல் ஒலியிலும் (Audio) பெரும் மாற்றமடைந்துள்ளது, ஆதாவது DOLBY மற்றும் 5.1 surround லிம் நாம் கேட்கலாம். இந்த HD இன் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் காட்சிகள் 16:9 (16*9 அளவில் ) அகன்ற காட்சிகளை காணலாம்.இதனை காண LCD,LED மற்றும் plasma TV இல் கண்டு களிக்கலாம்.இதனை பற்றி இனி வரும் பதிப்புகளில் காணலாம்.

சேனல்களுக்கு இந்த HD கட்டமைப்பை அமைக்க கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும், இதெற்கென பிரத்தேக கேமரா மூலம் படம் பிடிக்க வேண்டும். சேனல்களின் வருமானத்தை பார்த்தால் இந்த செலவு ஒரு பொருட்டல்ல என நினைக்கிறேன்.

ஒரு திரையரங்கில் நாம் படம் பார்க்கும் அனுபவத்தை இந்த HD மூலம் அமைக்கப்பட்ட வீட்டு திரைஅரங்கில் அனுபவிக்கலாம், அதாவது HD settop box, பெரிய LCD TV மற்றும் 5.1 surround உள்ள ஒலிப்பெருக்கி மூலம் அனுபவிக்கலாம்.

5 comments:

  1. நல்ல டாப்பிக். அருமையான பதிவு. தொடரவும்..

    ReplyDelete
  2. நன்றி திரு.ரவி , உங்கள் ஊக்கம் என்னை உற்சாகப்படுத்துகிறது ....

    ReplyDelete
  3. வெகு சுவாரஸ்யமான விஷயம்.தொடரவும். நன்றி.

    ReplyDelete
  4. நன்றி பிரேம்ஜி

    ReplyDelete