
அடுத்து நாம் பார்க்க இருப்பது LCD டிவியில் HighDef இன் பங்கு.
இதில் மிக மிக பிரமாண்டமான வளர்ச்சி கண்டுள்ளது இந்த HD நுட்பம்,HD இன் வரவினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது CRT தொழில் நுட்பத்தை கொண்ட இன்றைய சாதரண தொலைக்காட்சிகள் , ஒவ்வொரு மாதமும் LCD மற்றும் Plasma TVக்களின் விற்பனை சதவீதம் எகிறிக் கொண்டிருக்கிறது. Plasmaவை விட LCD TV விலை குறைவு என்பதால் மக்களும் இதையே விரும்புகின்றனர், அதனால் சந்தைக்கு LCD TV புதுப்புது வசதிகளுடன் வருகிறது, அது என்னங்க LCD Plasma என்று கேட்குகிறிர்களா?
LCD என்பது Liquid Crystal Display (படிகச்சீர் நீர்மத் திரை) என்பதன் சுருக்கம், இது குறைந்தளவே மின்சாரம் எடுக்கும் என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும். Plasma என்பது PDP என்னும் plasma display panel ஆகும், இதுவும் HD காட்சிகளை வழங்கும் ஒரு தட்டைவடிவான தொலைக்காட்சி நுட்பம்.
சந்தை மதிப்பில் Plasma வை விட LCD தான் அதிகளவு விற்பனையாகிறது. ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனங்களும் தமது LCD திரை தொலைக்காட்சிக்கு ப்ரேத்யேக பெயரை வைத்து சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. உதாரணத்திற்கு Sony BRAVIA என்றும் LG Scarlett என்றும் Panasonic VIERA என்றும் Toshiba REGZA என்றும் ஒவ்வொரு தயாரிப்பும் புதுப்புது பெயரில் வெளியிடுகிறது.
வெறும் LCD TV மட்டும் இருந்தால் நாம் HighDef காட்சிகளை காண முடியுமா? கண்டிப்பாக முடியாது,HD இல் காண்பதற்கு உள்ளீடும் (input) HD யை கொண்டிருக்க வேண்டும், உதாரணத்திற்கு HD settop box மூலம் HD சேனல்களை LCD TV மூலம் பார்க்கலாம்,Blueray பிளேயர் மூலம் HD திரைப்படங்களை காணலாம்.HD வசதி கொண்ட வீடியோ கேமராவை
இணைத்தும் பார்க்கலாம்.LCD டிவியில் நாம் கவனிக்க வேண்டியது அதன் Contrast ratio மற்றும் response time. LCD டிவியில் Contrast ratio அதிகம் இருக்க வேண்டும் response time மிக குறைவாக இருக்க வேண்டும்.
தற்போது LCD டிவியில் கம்பியற்ற இணைப்பு(wireless) வசதிகளுடன் வருகிறது இதன் மூலம் இணைய இணைப்பு கொண்டு NetFlix,YouTube,Hulu மற்றும் Amazon video போன்ற இணையதளங்களில் உள்ள வீடியோ படங்களை LCD திரையிலே காணலாம்.
அடுத்த பதிவில்.......

This comment has been removed by a blog administrator.
ReplyDelete